நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

Press Release · April 2026 · Chennai
ஒரு ஆவணப்படத்தின் பயணம்
ஒரு வாழ்க்கை.
ஒரு போராட்டம்.
ஒரு நினைவாக பதிவு.
“நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்”
ஒரு மனிதரின் கதையை மட்டும் அல்ல
ஒரு சிந்தனையின் தொடர்ச்சியை பதிவு செய்கிறது.
வெளியீட்டு நிகழ்வு
பிப்ரவரி 8, 2026 அன்று,
சென்னை தாகூர் ஃபிலிம் சென்டரில்
இந்த ஆவணப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்:
திருமதி சாந்தி துரைசிங்
திரு. துரைசிங் (சக்தி மசாலா நிறுவனர்கள்)
திரு. ஐ.நா கண்ணன்
திரு. பாரதி கிருஷ்ணன் (ஆவணப்பட இயக்குனர்)
திரு. டி.கே சந்திரன் (தி சென்னை சில்க்ஸ் சேர்மன்)
மற்றும் மாண்புமிகு நீதியரசர்
அரங்க. மகாதேவன் அவர்கள்
இந்த ஆவணப்படத்தை வெளியிட்டார்.
இது ஒரு வெளியீடு மட்டுமல்ல.
ஒரு வாழ்க்கைக்கு வழங்கப்பட்ட மரியாதை.
திரையிடல் பயணம்
இந்த ஆவணப்படம் தற்போது வரை
தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.
அரங்குகள், கல்லூரிகள், சமூக தளங்கள்
பல தரப்பட்ட மக்களிடம் இந்த படம் சென்றடைந்துள்ளது.
மாணவர்கள் உட்பட
10,000க்கும் மேற்பட்டோர் இந்த படத்தை பார்த்துள்ளனர்.
ஒவ்வொரு திரையிடலும்
ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது.
அடுத்த கட்டம்
இந்த ஆவணப்படத்தை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கில்,
19வது மும்பை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2026-இல் திரையிட விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் சமூக பங்களிப்பு உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

அடுத்த தயாரிப்பு

இதனுடன்,
கே கே வி மீடியா வெஞ்சர்ஸின்
மூன்றாவது தயாரிப்பான
“சுவடுகளைத் தேடி...”
தியாகி லட்சுமி காந்தன் பாரதி IAS அவர்களின்
ஆவணப்படமும்
அதே திரைப்பட விழாவில்
நேஷனல் டாக்குமென்டரி போட்டிக்காக
நேரடியாக (பொது திரையிடல் இன்றி)
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் ஒரு முக்கியமான பதிவாக அமையும்.
நிறைவு
எப்போதும் போல்,
உங்களின் ஆதரவும் வாழ்த்துகளும் எங்களுக்கு பலம்.
நாங்கள் உருவாக்குவது
படங்கள் அல்ல.
நினைவுகள்.
இந்த நினைவுகள்
உலகம் முழுவதும் சென்றடையும்
என்ற நம்பிக்கையுடன்.
